வில்வராயநத்தம்: கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு
கடலூர் அரசு மருத்துவமனை எதிரே வில்வராயநத்தம் பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால் வாய்க்காலில் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வேகமாக வெளியேற வழியின்றி தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே கழிவுநீர் வடிகால் வாய்க்காலை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.