கடலூர்: பொங்கல் தொகுப்பு; கரும்பு விவசாயிகள் கோரிக்கை

53பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்தனர். தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெற்றுள்ள நிலையில் இடைத்தரகர்கள் மூலம் பொங்கல் கரும்பு கொள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இடைத்தரகர்கள் இல்லாமல் அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி