கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவு, கண் மருத்துவப் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல பகுதிகளில் கொசுக்கள் மூலம் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் பணியாளர்கள் மூலம் கொசு மருந்து அடிக்கும் பணி இன்று (ஜனவரி 3) நடைபெற்றது. இது மட்டுமல்லாமல் மாவட்ட நிர்வாகம் சார்பில் காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.