விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியின் கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்தது. இந்நிலையில், குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.