கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள நெடுஞ்சாலை மின்விளக்குகள் சில பழுதடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று ஊழியர்கள் மூலம் நெடுஞ்சாலை மின்விளக்குகள் பராமரிப்பு நடைபெற்றது. ராட்சஸ் ஜே.சி.பி. எந்திரம் மூலம் நடைபெற்ற இப்பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் எரியாமல் இருந்த மின்விளக்கை மாற்றி புதிய மின்விளக்கு பொருத்தினர்.