

கே.கே.நகர்: பூச்செடியில் இருந்த நல்ல பாம்பு மீட்பு
கடலூர் மாவட்டம் கே. கே. நகர் பகுதியில் உள்ள ஒருவருடைய வீட்டில் தொட்டி வைத்து வளர்க்கப்பட்ட பூச்செடியில் நல்ல பாம்பு ஒன்று உள்ளதாக பாம்பு பிடி வீரர் செல்லாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் செல்லா லாவகமாக பாம்பை பிடித்து காப்பு காட்டிற்கு விட எடுத்து சென்றார். இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.