இலவச வீடு கட்டும் திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும், வீட்டுமனை பட்டா வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கடலூரில் கடலூர் மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.