கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகி குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கர் என்பவர் நேற்று முன்தினம் (ஜனவரி 1) நள்ளிரவு மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, கொலைக்கு காரணமானவராக கருதப்படும் சதீஷ் என்பவரின் வீட்டை சங்கரின் ஆதரவாளர்கள் சூறையாடியுள்ளனர். இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.