கடலூர்: ரெயின்கோட் வழங்கிய மேயர்
கடலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மழைக்காலத்தில் பணிபுரிய ஏதுவாக மழை கோட் இன்று கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் வழக்கறிஞர் பா தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையர் அனு ஐ. ஏ. எஸ் ஆகியோர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியினை சுகாதார அதிகாரி டாக்டர் எழில் மதனா ஒருங்கிணைத்து இருந்தார். இதில் மாநகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.