கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள சாய்பாபா ஆலயத்தில் இன்று (ஜனவரி 1) ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.