கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் இன்று பணிக்கு வந்தபோது அங்கு பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் உடனடியாக இது குறித்து கடலூரில் பாம்பு பிடி வீரர் செல்லாவுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த அவர் கொடிய விஷமுடைய கட்டுவிரியன் பாம்பினை லாவகமாக பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.