

மீனாட்சிப்பேட்டை: சாலை மறியல் தடுத்து நிறுத்தம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள வெங்கடேஸ்வரா நகரில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வராமல் இருப்பதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்து வந்த நிலையில் இன்று குறிஞ்சிப்பாடி - நடுவீரப்பட்டு செல்லும் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக தடுத்து நிறுத்தி குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலைந்து சென்றனர்.