கடலூர் மாவட்டம் செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு இன்று காலை ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெற்றிலை மற்றும் துளசி மாலை சாற்றி, புத்தாடை உடுத்தி சிறப்பு திருமஞ்சனம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.