தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடலூர் கிழக்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிட கழக அலுவலகத்தில் நேற்று (டிசம்பர் 26) கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட அவைத்தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு 500 பேருக்கு அன்னதானம் மற்றும் அரிசி, போர்வை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.