கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கம்மியம்பேட்டை, கெடிலம் பைபாஸ் சாலையில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. லாரிகள், பேருந்துகள், வேன், கார்கள், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகளவு செல்லும் இச்சாலையில் மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சாலையில் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டுமென கோரிக்கை எழந்துள்ளது.