
கடலூர்: ஒரே நாளில் குவிந்த 840 மனுக்கள்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 840 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.