தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள பயண அட்டை வழங்கப்படும் என தமிழக அரசு பிறப்பித்த ஆணையின்படி கடலூர் மாவட்ட காவலர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அரசு பேருந்து பயண அட்டையை வழங்கினார். காவலர்கள் முதல் காவல் ஆய்வாளர்கள் வரை பயண அட்டையை பயன்படுத்தி கடலூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.