கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு ஜெயலலிதா சிலை மற்றும் படத்திற்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.