முருங்கைக்காயில் இரும்பு, கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி, பி12 ஆகிய சத்துக்களுடன் நியாசின், ரிப்போஃப்ளேவின் போன்ற நுண் ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளது. இது தாம்பத்திய வாழ்க்கைக்கு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது, கீல்வாதத்தை குறைப்பது, உடலில் நீரிழப்பை தடுப்பது, சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது, பித்தப்பையின் வேலையை மேம்படுத்துவது போன்ற பிற நன்மைகளையும் செய்கிறது.