கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி. கொத்தங்குடி ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியை சிதம்பரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் சிதம்பரம் உதவி ஆட்சியா் உள்ளிட்ட பல்வேறு அலுவலா்களிடம் மனு அளித்துள்ளனா். இது தொடா்பாக, சிதம்பரம் காந்தி சிலை அருகில் சி. கொத்தங்குடி ஊராட்சி மக்கள் நேற்று கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.