புவனகிரி: அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம்

83பார்த்தது
கடலூர் மாவட்டம் புவனகிரி வழியாக கத்தாழை நோக்கி செல்லும் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து உள்ளே பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் இருந்த காரணத்தினால் அமர்வதற்கு இடம் இல்லாமல் போனது. இதனால் அரசு பேருந்தில் இடம் இல்லாமல் போனதால் பேருந்து படிக்கட்டில் உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் மாணவர்கள் தொங்கிச் சென்றனர். பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தபோது மாணவர்களின் கால்கள் தரையில் உரசியதை பார்த்து பின்னால் வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் ஊறைந்தே போனார்கள். பலமுறை இப்பகுதியில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்காமல் போனதின் காரணமாக இதுபோன்று பேருந்து படிக்கட்டிலேயே ஆபத்தான முறையில் தொங்கிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் மாணவர்களின் உயிரோடு விளையாடக்கூடாது என பலமுறை மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையிலும் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூடுதல் பேருந்துகளை இயக்காமல் மாணவர்களின் உயிரோடு விளையாடுவதிலேயே குறியாக இருப்பதாக அவர்கள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர். உடனடியாக கூடுதல் பேருந்துகளை இயக்கி மாணவர்கள் படிக்கட்டில் தொங்காமல் பயணம் செய்ய வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தி வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி