சிதம்பரம்: எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்

76பார்த்தது
எஸ்டிபிஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்திய) கட்சியின் தேசிய தலைவர் பைஜி அமலாக்கத்துறை கைது செய்ததை கண்டித்தும் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கடலூர் கிழக்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஐ. ஷர்புதீன்ஷரீப், தலைமை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் பி. ஹிதாயத்துல்லாஹ் வரவேற்று பேசினார். மாநில பேச்சாளர் ஆபிருதீன் மன்பயி, கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் டி. பக்ருதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஏ. அன்சாரி, கடலூர் மாவட்ட தொழிற்சங்க தலைவர் அமீர் உசேன், சிதம்பரம் தொகுதி தலைவர் எம். கே. மக்தும்அலி, சிதம்பரம் தொகுதி செயலாளர் ரபீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிதம்பரம் நகர தலைவர் எஸ். முஹம்மதுஅஸ்லம், பரங்கிப்பேட்டை நகர தலைவர் எம். கே. பிலாலுதீன் உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி