லால்புரம்: இன்று உண்ணாவிரத போராட்டம்

62பார்த்தது
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியுடன் லால்புரம் ஊராட்சி மற்றும் சி கொத்தங்குடி, சி. தண்டேஸ்வரர் நல்லூர், உசுப்பு பள்ளிப்படை உள்ளிட்ட ஏழு ஊராட்சிகளையும் இணைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு அனைத்து ஊராட்சிகளில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் லால்புரம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்து ஊராட்சியை, நகராட்சியுடன் இணைக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பின்னர் இதுகுறித்து நூதனமான முறையில் அவர்கள் முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தையும் நடத்தினர். இந்த நிலையில் ஊராட்சியை, நகராட்சியுடன் இணைப்பதைக் கண்டித்து லால்புரம் ஊராட்சியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மணலூர் நெடுஞ்சாலையில் ஓரமாக அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி