கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம் பாளையங்கோட்டை மேல்பாதி கிராமப் பஞ்சாயத்து ஐந்தாவது வார்டு மற்றும் ஆறாவது வார்டு சாலை வசதி சரியாக இல்லாததால் தற்போது பெய்த மழையால் சாலையில் குளம்போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சாலை வசதி மற்றும் கால்வாய் வசதி ஏற்படுத்திதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.