"திருச்செந்தூர் மற்றும் ராமநாதசுவாமி கோயில்களில் உயிரிழந்த பக்தர்கள் இருவரும், தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனர். கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழக்கவில்லை மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடியால், அண்ணாமலை போன்றோர் இந்து சமய அறநிலையத்துறையின் மீது இதுபோன்ற களங்கம் கற்பிக்க முயல்வதில் வியப்பேதுமில்லை" என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.