மத்திய அரசின் முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி உபகரண உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் அதிகாரிகளிடம், அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் போல் நடித்து சைபர் குற்றவாளிகள் சுமார் ரூ.55 லட்சத்தை ஏமாற்றியுள்ளனர். போலி இமெயில் மூலம் அமெரிக்காவின் PS Engineering நிறுவனம் போல் நடித்து சைபர் குற்றவாளிகள் ஒரு மத்திய அரசின் நிறுவனத்தை ஏமாற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.