கடலூர் மாவட்டம் புவனகிரியில் சுமார் 62 லட்சம் மதிப்பீட்டில் ஆற்றுப்படுகையில் போக்குவரத்திற்கு வழி இல்லாமல் கட்டப்பட்டுள்ள உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல் மணிகளை வெயிலில் உலர வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புவனகிரி பகுதியில் கடந்த இரு தினங்களாக பெய்த மழையினால் இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் நெல் குவியல்கள் மழையில் நனைந்து சேதம் ஆனது. இந்நிலையில் இன்று காலநிலை மாறி புவனகிரி பகுதியில் கடும் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மழையில் நனைந்த நெல்மணிகளை அங்குள்ள பணியாளர்கள் உலர வைத்து வருகின்றனர் தற்போது உலர வைக்கப்பட்டு வரும் நெல்மணிகள் சுமார் 400 மூட்டைகள் இருக்கும் என கூறப்படுகிறது மழையில் போதிய பாதுகாப்பு இல்லாமல் இயங்கி வந்த இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வியர்வை சிந்தி உழைத்துப் பயிரிட்ட நெல்மணிகளை மழையில் நனைய வைத்து தற்போது மீண்டும் வெயிலில் உலர வைக்கும் அவல நிலையை விவசாயிகள் வேதனையோடு கண்டித்து வருகின்றனர்