கவுண்டம்பாளையம் - Kavundampalayam

கோவை: முதல்வரை கடுமையாக சாடிய வானதி சீனிவாசன்..

கோவை: முதல்வரை கடுமையாக சாடிய வானதி சீனிவாசன்..

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (டிசம்பர் 22) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக சட்டசபையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றதை அடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், பாஜக எம்பிக்கள் அவையை முடக்க முயன்றதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள வானதி சீனிவாசன், தமிழக சட்டசபையை இரண்டு நாட்கள் மட்டுமே நடத்திவிட்டு, நாடாளுமன்றத்தை குறை கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செயல்படாமல் போனதற்கு பாஜக காரணமல்ல என்றும், இண்டி கூட்டணி கட்சிகளே திட்டமிட்டு நாடாளுமன்றத்தை முடக்கியதாகவும் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். தந்தை (கருணாநிதி) - மகன் (மு.க. ஸ்டாலின்) - பேரன் (உதயநிதி ஸ்டாலின்) புகழ்பாடும் மன்றமாக தமிழ்நாடு சட்டமன்றத்தை மாற்றியவர்கள், ஜனநாயகத்தை மதித்து, அனைத்துத்தரப்பினருக்கும் வாய்ப்பளித்து நாடாளுமன்றத்தை நடத்தும் பாஜகவை குறை சொல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள், என்று வானதி சீனிவாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా