சின்ன தடாகம்: கருஞ்சிறுத்தை நடமாட்டம்!

59பார்த்தது
கோவை மாவட்டத்தில் காட்டு விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தடாகம், மாங்கரை, ஆனைகட்டி, மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு விலங்குகள் அடிக்கடி தென்படுகின்றன. அந்த வகையில் தற்போது சின்னத்தடாகம் பகுதியில் கருஞ்சிறுத்தை நடமாடிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காப்புக் காடுகள் (Reserve Forest) பகுதிகளான ஆனைகட்டி, மாங்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தடாகம், சோமையனூர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அவ்வப்போது தென்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று சின்னத்தடாகம்-வீரபாண்டிப்புதூர் செல்லும் வழியில் சரவணன் என்பவரின் வீட்டிற்கு அருகில் ஒரு கருஞ்சிறுத்தை நடமாடும் காட்சிகள் அருகே இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், வீரபாண்டிபுதூர் செல்வோர் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி