கோவை: மது போதையில் தம்பதியர் தகராறு!

62பார்த்தது
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு தினம்தோறும் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், நேற்று காலை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை, திருப்பூர், நீலகிரி போன்ற பகுதிகளுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, அந்த கூட்டத்திற்கு மத்தியில் ஒரு தம்பதியினர் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டனர். மது போதையில் இருந்த அந்த தம்பதியினர், பயணிகள் அமரும் இருக்கையில் அமர்ந்துகொண்டு ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். மேலும், கையில் ஒரு கம்பை வைத்துக்கொண்டு அடிதடி ரகளையில் ஈடுபட்டனர். சண்டையை தடுக்க முயன்றவர்களிடமும் அந்த பெண் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, அவர்களையும் தாக்க முயன்றார். இதனால் அங்கு கூடியிருந்த அனைவரும் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்தனர். இதனிடையே, அங்கு வந்த இரு பெண் காவலர்கள் அந்தப் பெண்ணிடம் இருந்த கம்பை பிடுங்க முயன்றபோது, அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தாக்கவும் முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், பெண் காவலர்கள் சாதுர்யமாக செயல்பட்டு அந்தப் பெண்ணிடம் இருந்த கம்பை பறித்தனர். அதன் பிறகு, அங்கு வந்த ஆண் காவலர்கள் அந்த ஆணையும் பெண்ணையும் பேருந்து நிலையத்திலிருந்து வெளியேற்றினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி