கோவை, குடும்ப நல நீதிமன்றத்தில் தம்பதியர் ஒருவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வழக்கு நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து நீதிபதி அந்த ஆண் நபருக்கு இரண்டு லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்குமாறு தீர்ப்பு வழங்கினார். நேற்று மேலும் அந்த நபர் விவாகரத்து பெற்ற மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க 80 ஆயிரம் ரூபாயை நோட்டாக கொடுக்காமல் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாயணங்களை 20 மூட்டைகளில் கொண்டு வந்து, நீதிபதி முன்னிலையில் கொடுத்தார். அதை கண்ட நீதிபதி, நாணய மூட்டையை பண நோட்டாக மாற்றி வருமாறு அறிவுரை வழங்கி வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இது நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.