பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இன்று (டிசம்பர் 20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆவாரம்பாளையம்,அன்பு நகர், காமதேனு நகர், நவஇந்தியா, கணபதி பேருந்து நிறுத்தம்,சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி. கே. என். எம். மருத்துவமனை, அலமு நகர், பாலாஜிநகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் திருமண மண்டபம், மின் மயானம், பாப்பநாயக்கன்பாளையம் புதியவர் நகர்,காந்தி மாநகர் (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.