சடலத்துடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டது குறித்த வழக்கு ஒன்று சத்தீஸ்கர் மாநில உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், சடலத்துடன் உறவு வைத்துக் கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமாகாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். சடலத்துடன் உறவு வைத்துக்கொள்வது 'நெக்ரோபிலியா' என்று குறிப்பிடப்படுகிறது. பாலியல் வன்கொடுமை குற்றம் என்றால் அதனால் பாதிக்கப்பட்டவர் உயிருடன் இருந்திருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.