கணுவாய்: வீட்டுக்குள் புகுந்து கோழியை வேட்டையாடிய சிறுத்தை!

70பார்த்தது
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கணுவாய் அடுத்த திருவள்ளுவர் நகரில் நேற்று அதிகாலை அதிகாலை ஒரு சிறுத்தை வீட்டுக்குள் புகுந்து கோழியை வேட்டையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் காட்டு யானைகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வரும் நிலையில், சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நேற்று காலை 6: 15 மணி அளவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளில், சிறுத்தை கூண்டில் இருந்த கோழியை வேட்டையாடிச் செல்வது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதி ரிசர்வ் ஃபாரஸ்ட் பகுதி என்பதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மக்கள் வீடுகளைச் சுற்றி பாதுகாப்பு ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும், வனத்துறையின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி