தடாகம்: காட்டு யானைகள் அட்டகாசம்!

58பார்த்தது
கோவை மாவட்டம், தாளியூர் பகுதியில் உள்ள கொய்யா மரத் தோட்டத்தின் உரிமையாளர் மணி என்பவரின் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை, பாக்கு போன்ற பயிர்கள் காட்டு யானைகளால் சேதமடைந்துள்ளன. மேலும், அதே பகுதியில் உள்ள புறா தோட்டம் என்ற ராஜகோபால் என்பவரின் தோட்டத்திற்குள் நேற்று நள்ளிரவில் ஒற்றை காட்டு யானை புகுந்து உணவு தேடி அலைந்து திரிந்த காட்சிகள் சி. சி. டி. வி பதிவுகளில் பதிவாகியுள்ளன. இந்த சம்பவங்களால் அச்சமடைந்த அப்பகுதி பொதுமக்களும், விவசாயிகளும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் யானைகளை விரட்டிய பிறகும், மீண்டும் மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருவதால், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். சேதம் அடைந்த விவரங்களை பல முறை விண்ணப்பித்தும், இதுவரை அரசு எந்த இழப்பீடும் வழங்கவில்லை என்றும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி