கவுண்டம்பாளையம் - Kavundampalayam

கோவை: வயிற்றுவலியால் பாதித்த பெண்க்கு ணுஇழப்பீடு தர உத்தரவு

கோவை: வயிற்றுவலியால் பாதித்த பெண்க்கு ணுஇழப்பீடு தர உத்தரவு

கோவை அருகேயுள்ள தேவராயபுரம், புள்ளகவுண்டன் புதுாரை சேர்ந்தவர் மகேஸ்வரி(41). இவர் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், கடந்த 2015 டிசம்பர் முதல் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்தார். கர்ப்பமாக இருந்த காலத்தில் வயிறு வலி ஏற்பட்டதால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு வாரம் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிறகு மருத்துவ சிகிச்சைக்கான செலவுதொகை 1. 34 லட்சம் ரூபாய்க்கு கிளைம் கோரி விண்ணப்பித்தார். ஆனால், இன்சூரன்ஸ் நிறுவனம், வயிற்று வலி நோய்க்கு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி பணம் வழங்க மறுத்தனர்.  இதனால் பாதிக்கப்பட்ட மகேஸ்வரி இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், இன்சூரன்ஸ் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகை 1. 30 லட்சம் ரூபாய் திருப்பி தருவதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடு மற்றும் செலவு தொகை, 15000 ரூபாய் வழங்க வேண்டும் என்று நேற்று உத்தரவு பிறப்பித்தது.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా