கோவை சத்தி சாலையில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ்தே சபை பேராலயத்தில் நேற்று கிறிஸ்து பிறப்பு விழா நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். விழாவில் சிறப்புரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், உலகமே கொண்டாடும் விழா நமது கிறிஸ்மஸ் விழா. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
தான் படித்த பள்ளி டான்பாஸ்கோ, கல்லூரி லயோலா என்று குறிப்பிட்ட அவர், நானும் ஒரு கிறிஸ்துவன் என்பதில் பெருமைப்படுகிறேன் என்றார். இறுதியில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.