கிறிஸ்துமஸ் என்றால் மனதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடும். கிறிஸ்துமஸ் தோன்றிய வரலாற்றை பற்றி பல விதமான யூகங்கள் இருந்தாலும் இயேசு இவ்வுலகில் மனிதராக பிறந்தார் என்பது சரித்திர சான்று. கான்ஸ்டன்டைன் உரோமை அரசரான பிறகு கிறிஸ்துவம் அரச மதமாக அறிவிக்கப்பட்டது. அப்போது இருந்த திருத்தந்தை முதலாம் ஜீலியஸ் அவர்கள் கிபி 336-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதியை கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாட அதிகாரபூர்வமாக அறிவித்தார்.