கவுண்டம்பாளையம் - Kavundampalayam

கோவை: முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி

கோவை: முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி

கோவை மாவட்ட காவல்துறை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து முதல் உதவி சிகிச்சை அளிப்பது குறித்து போலீசாருக்கு இன்று பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 100 போலீசார் கலந்து கொண்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் முதல் உதவி சிகிச்சை அளிப்பது குறித்து பயிற்சி அளித்தனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்பதற்காக போலீசார் செல்கின்றனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வரும் வரை காத்திருக்காமல், விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிப்பது எப்படி? முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டவர்களை பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றுவது எப்படி? மாரடைப்பு ஏற்படுபவர்களுக்கு சிபிஆர் சிகிச்சை அளிப்பது எப்படி உள்ளிட்ட முதல் உதவி சம்பந்தமான பல்வேறு பயிற்சிகள் போலீசாருக்கு அளிக்கப்பட்டன. இது குறித்து எஸ்பி கார்த்திகேயன் கூறுகையில், ''8 பேட்சுகளாக பிரிக்கப்பட்டு சுமார் 800 போலீசாருக்கு முதல் உதவி சிகிச்சை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் ஆர்வம் காட்டும் போலீசாருக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்படும்''. என்றார்.

வீடியோஸ்


మహబూబ్‌నగర్ జిల్లా