சரக்கு வாகனம் கவிழ்ந்து 6 பேர் பலி.. 30 பேர் படுகாயம்

70பார்த்தது
சத்தீஸ்கர்: பஸ்தர் மாவட்டத்தில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 45 பேரை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் சந்தமேட்டா கிராமத்திற்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, விபத்து எவ்வாறு நடந்தது என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி