பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து நமக்கு ஏற்கனவே தெரியும். உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், ரத்தத்தில் கொழுப்பு இருப்பவர்கள் பூண்டை உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள், அடிக்கடி தொண்டை அழற்சி பிரச்சனை இருப்பவர்கள் பூண்டை சாறு எடுத்து அதை தேனில் குழைத்து உள்நாக்கில் தடவி வர அழற்சி வராமல் தடுக்கும். குழந்தைகளுக்கு வரும் டான்சில் என்னும் உள்நாக்கு அழற்சியையும் இந்த மருந்து சரி செய்யும்.