இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சைபர் குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. புது, புது வழிகளில், மர்ம நபர்கள் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும், தங்களின் வாடிக்கையாளர்கள் செல்போன் எண்ணின் காலர் டியூனாக, 'சைபர் கிரைம்' விழிப்புணர்வு வாசகங்களை நிறுவி உள்ளன. இந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடுத்த 3 மாதங்களுக்கு, நாள்தோறும் 8 முதல் 10 முறை ஒலிபரப்பாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.