வாழைப்பழத் தோலில் உள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் போன்றவை செடிகளுக்கு நல்ல உரமாக அமைகிறது. வாழைப்பழத் தோலை சிறிது சிறிதாக வெட்டி தண்ணீர் ஊற்றி 3 நாட்கள் மூடி வைக்கவும். 3 நாட்களுக்குப் பிறகு அந்த தண்ணீர் கருப்பாக மாறியிருக்கும். இந்த நீரை எடுத்து ஒரு வாளி தண்ணீரில் கலந்து செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் நன்றாக வளர்வதோடு விரைவாக பூக்கவும், காய்க்கவும் செய்யும். செலவே இல்லாமல் செடிகளுக்கு சத்துக்கள் நிறைந்த உரத்தை தயாரிக்கலாம்.