வாகனங்களில் இந்த மாற்றங்களை செய்யக்கூடாது
சிலர் தங்களுடைய வாகனங்களில் தங்களுக்கு பிடித்தது போல மாற்றங்களை செய்து கொள்கின்றனர். ஆனால் வாகன பதிவுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கு முரணாக மாற்றங்கள் செய்யக்கூடாது. நிறங்களை மாற்றுவது, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்துவது, பக்கவாட்டு கண்ணாடிகளை அகற்றுவது, பேன்சி நம்பர் உடன் நம்பர் பிளேட், பெரிய டயர்களை பொருத்துவது, இஞ்சின், பிரேக்கிங் சிஸ்டத்தில் மாற்றம் செய்வது ஆகியவை இந்தியாவில் சட்ட விரோத நடவடிக்கைகள் ஆகும்.