கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசு பேருந்தை ரகுராம் என்பவர் நேற்று (அக். 23) இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது திருப்பூர் காந்தி நகர் சிக்னல் அருகே பேருந்து வந்த போது பைக்கில் வந்த போதை ஆசாமி பிரதீப் என்பவர் ரகுராமிடம் தகராறு செய்தார். பின்னர் பேருந்துக்குள் ஏறிய அவர் ஓட்டுனர் மடியில் குழந்தை போல அமர்ந்தார். இதை தொடர்ந்து போலீசார் பிரதீப்பை கைது செய்தனர்.