பூமியை குளிர்ச்சி அடைவது செய்வதற்கு வளிமண்டலத்தில் வைரத் துகள்களை தூவ வேண்டும் என ஆய்வு ஒன்று கூறியுள்ளது. சூரிய ஒளியை பிரதிபலித்து பூமியின் வெப்பநிலையை குறைக்க ஆண்டுதோறும் 5 மில்லியன் டன்கள் பொடியாக்கப்பட்ட வைரங்களை வளிமண்டலத்தில் தூவுவது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைமுறை 45 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தால் பூமியை கிட்டத்தட்ட 1.6 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குளிர்விக்கும் என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது.