நம் உடலின் உறுப்புகளுக்கு மட்டுமல்ல, வெளியில் தெரியும் சில பாகங்களுக்கும் பெயர் உண்டு. உதட்டுக்கும், மூக்குக்கும் இடைப்பட்ட பகுதி ‘பில்ட்ரம்’ என்றும், இரு புருவங்களுக்கு இடைபட்ட பகுதி ‘கிளாபெல்லா’ என்றும், முழுங்கைக்கு அருகில் உருவாகும் மடிப்பு ‘ஓலெக்ரானன்’ என அழைக்கப்படுகிறது. தோள்பட்டைக்கு பின்னால் உள்ள எலும்பு ‘ஸ்காப்யூலா’ என்றும், பெருவிரல் ‘ஹாலக்ஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.