தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ரேஷன் கடைகள் செயல்படும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்தியாவசிய பொருட்களை சிரமம் இன்றி பொதுமக்கள் பெற்று தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.