சேலம் நகரம் - Salem City

சேலம்: சிறைகளில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 12 கைதிகள் விடுதலை

சேலம்: சிறைகளில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 12 கைதிகள் விடுதலை

சேலம் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 750-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர மாவட்டம் முழுவதும் உள்ள கிளை சிறைகளிலும் ஏராளமான கைதிகள் உள்ளனர். குற்ற வழக்குகளில் தொடர்புடைய கைதிகளை விசாரணையை முடிவுக்கு கொண்டு வந்து அவர்களை விடுதலை செய்யும் நோக்கில் நேற்று மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடத்தப்பட்டது. சேலம் மத்திய சிறையில் 13 கைதிகளின் வழக்கு விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் சமரசம் செய்து 4 கைதிகள் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர். அதேபோல் மாவட்டத்தில் உள்ள கிளை சிறைகளில் உள்ள மொத்தம் 29 கைதிகளின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. முடிவில் 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் மற்றும் நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டத்தில் சிறைகளில் நடந்த மக்கள் நீதிமன்றம் மூலம் 12 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా