கலெக்டர் ஆபீசில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

65பார்த்தது
சேலம் கோட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தர்யா (வயது30). இவர் நேற்று காலை தனது மகன் ஹரீஷ் (5), மகள் பவிசா (3) மற்றும் தாயுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் திடீரென்று கேனில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் மீட்டு, அங்கிருந்து அப்புறப்படுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர்.
இது குறித்து சவுந்தர்யா கூறும் போது மாநகராட்சியில் குடிநீர் தொட்டி ஆபரேட்டராக பணியாற்றி வரும் தினேஷ்குமாருடன் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது கணவர் அவருடைய உறவினர்களுடன் சேர்ந்து தனது பெற்றோரிடம் வரதட்சணை வாங்கி வரும் படி கூறி அடித்து துன்புறுத்துகிறார். பல முறை என்னை வீட்ைட விட்டு வெளியேற்றினார். இதனால் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தேன்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டிற்கு வந்தேன். தற்போது தொடர்ந்து வரதட்சணை கேட்டு அடித்து, துன்புறுத்தி வருகிறார். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
எனவே வரதட்சணை கேட்டு, அடித்து துன்புறுத்தும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி